• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்

உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

உதகையை அடுத்த புதுமந்து செல்லும் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு டீசல் ஏற்றி வந்த மினி ஆட்டோ டீசல் இறக்குவதற்காக ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் பாதுகாவலரிடம் அனுமதி வாங்குவதற்கு சென்று உள்ளார்.அப்போது அந்த வழியாக வந்த கார் செல்வதற்கு வழியில்லாமல் சரக்கு ஆட்டோவிற்கு பின் நின்றது. அப்போது எதிர்பாரத விதமாக சரக்கு ஆட்டோ பின்னோக்கி நகர்ந்து கார் மீது மோதியதால் காரையும் தள்ளிக்கொண்டு ஆட்டோவும் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் கார் மற்றும் ஆட்டோவில் இருந்த 5 பேர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதி பணியாளர்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து உதகை புதுமந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.