• Fri. May 3rd, 2024

தலைமுறைகளின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று…

ByKalamegam Viswanathan

Jul 7, 2023

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜூலை 7, 1981ல் ராஞ்சியில் பிறந்தார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக 20-20 (2007-08), பொதுநலவய போட்டித் தொடர் (2010) மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒரு நாள் போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் தற்கால வரையிட்ட நிறைவுத் துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.

2004ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார். மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். 2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார்.அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. இவர் கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.

2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது. இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்). எம். எஸ். தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
கிரிக்கெட் உலகில் தோனி படைத்துள்ள அசைக்க முடியாத சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டன்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளில் தனது அணியை கேப்டனாக வழி நடத்தி உள்ளார்.

ஐசிசியின் மூன்று பிரதான தொடர்களை வென்ற கேப்டன்!
தோனி 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய மூன்று பிரதான தொடர்களில் இந்தியாவை சாம்பியன் பட்டம் வெல்ல செய்துள்ளார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு பத்து ஐசிசி தொடர்களில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார்.

அதிக ரன்களை பதிவு செய்துள்ள இந்திய விக்கெட் கீப்பர்

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவு செய்துள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2005இல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுட்டாகாமல் 183 ரன்களை குவித்தார் தோனி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதோடு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களிலும் இது அடங்கும். 2013இல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 ரன்களை குவித்தார் தோனி. இதுவே இதுநாள் வரையில் டெஸ்ட் அரங்கில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

ஒருநாள் கிரிக்கெட்டின் நாட்-அவுட் பேட்ஸ்மேன்

ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்று அதன் மூலம் வெற்றி தேடி தருவதில் தோனி வல்லவர். அதனாலேயே அவர் சிறந்த பினிஷர் என அழைக்கப்படுகிறார். தோனி பேட் செய்து விளையாடிய 297 ஒருநாள் இன்னிங்ஸில் 84 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். குறிப்பாக ரன்களை விரட்டும் போது தோனி 51 முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் விளையாடி உள்ளார். அதில் 49 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸில் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக விளையாடிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி!

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *