• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேப்டன் தேமுதிக நிறுவனத் தலைவர் நினைவு நாள் …

BySeenu

Dec 29, 2025

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே ராமச்சந்திரன் அழகுராணி ஏற்பாட்டில் கேப்டன் திருவுருவப்படம் வைத்து பூஜைகள் செய்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த அன்னதான நிகழ்ச்சியில் பீளமேடு பகுதி கழக செயலாளர் வி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் சிங்கைkசந்துரு , மாவட்ட பொருளாளர் ராகவலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அரவிந்தன், பகுதிகழக பொருளாளர் கோழிக்கடை தேவா,குமார் கோவிந்தராஜ், ஆர் கே செல்வம், வடிவேல் ,ராஜேஷ், தனபால், விஜயகுமார், கண்ணன் மணிகண்டன் , கதிர்வேல், நந்தகுமார் மற்றும் மகளிர் அணியினர் முத்தம்மாள் ,சுப்புதாயி , ராஜாமணி, சரஸ்வதி, ஆகியோர் கேப்டன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதுபோல் அனைத்து வார்டுகளிலும் பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.