கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முழுவதும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காந்திபுரம் பகுதியில் கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மெளன அஞ்சலி கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் மன்சூர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷாஜகான், சிராஜ், துணைப் பொருளாளர் அப்பாஸ், ஆலோசகர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் பகுதி செயலாளர் நசீர் மற்றும் காந்திபுரம் பகுதி பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் அபுதாஹிர், முஜிபுர்ரஹ்மான் மற்றும் ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த துயர நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியில் கலந்து கொண்டனர்.