நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி நகராட்சி பகுதியில் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி நகர செயலாளர் சாதிர் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னுசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில், 7வது வார்டு முப்புடாதி, 32வது வார்டு மகாலெட்சுமி, 23வது வார்டு ராதிகா, 1வது வார்டு கூட்டணி கட்சி வசந்தி, 13வது வார்டு ரெஜினா, ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.. அப்போது மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலாமணி ராஜேந்திரன், வேம்பு, சாரதி முருகன், நாகப்பன், மைதீன், மதிமுக நகர செயலாளர் வெங்கடேஷ்வரன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.









; ?>)
; ?>)
; ?>)