• Thu. May 2nd, 2024

குமரியில் வரலாற்று புகழ்பெற்ற ‘கருங்கல்’சந்தையில் வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் மீன் சந்தை பகலில். மீன் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி. இரவிலோ…. பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு சிறப்பான திடல்.

குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவுக்கு பின் வந்த அன்றைய நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் முதல் இடைத் தேர்தலில், 1967_சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தோல்வி அடைந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது மட்டுமே அல்ல. தமிழகத்தில் மாநில கட்சியான தி மு க, முதல் முதலாக அண்ணாவின் தலைமையில் ஆட்சியில் அமர்ந்த தேர்தல்.

பெரும் தலைவர் காமராஜர் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில். தி மு க வின் வேட்பாளராக போட்டியிட்ட சட்ட கல்லூரி மாணவன் சீனிவாசன் இடம் தோல்வி அடைந்திருந்த நிலையில், தமிழகத்தில் வந்த முதல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பெரும் தலைவர் காமராஜர் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தமிழக காங்கிரஸ்யின் அப்போதைய தலைவரான சி. சுப்பரமணியமும் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தலைவர் காமராஜர் இடம் தமிழக காங்கிரஸ் கட்சியின் விருப்பம் மட்டும் அல்ல., தமிழக மக்களின் விருப்பம் என தெரிவித்தனர்.

குமரி மக்களின் விருப்பம் என்ன என்று கேட்டு வாருங்கள் என பெரும் தலைவர் தெரிவிக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் சி.சுப்பரமணியம். தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழ. நெடுமாறன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழுவில் அன்றைய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முகமது இஸ்மாயில், அன்றைய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மகாதேவன் பிள்ளை அடங்கிய குழு குமரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள், பொதுமக்கள், சிறு வியாபாரிகள் முதல் சமுகத்தின் அனைத்து நிலை மக்களிடம் கருத்துக்கேட்டதையும், அவர்களது கருத்தின் தன்மையை, தலைவர் காமராஜர் இடம் தெரிவித்த சில நாட்களில்,

பெரும் தலைவர் காமராஜர் குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் நடத்திய பின், இரண்டாம் நாள் இரவு கருங்கல் சந்தை திடலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், பெரும் தலைவரே நாகர்கோவில் மக்களவைக்கு(1969) நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதை அறிவித்தார்.

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்திற்கு நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த் கருங்கல் மீன் சந்தையில் மீன் வியாபாரிகள், பொது மக்களிடம் ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில்.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், வட்டார தலைவர் பொன் சாலமன் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உட்பட இந்திய கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *