• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி உள்ளதா என்பதை பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதற்கு பின் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதைதொடர்ந்து கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.