• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!

ByA.Tamilselvan

May 31, 2023

யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “எனக்கு 69 வயதாகிறது. 70 வயதை நெருங்கி கொண்டிருக்கிறேன். ஆனால், நான் இப்போதும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அப்படி என்னால் இருக்க முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன். அந்த வித்தையை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது சொல்வேன்”என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ‘போர் தொழில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், “ஒரு மீட்டிங்கில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.