• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விமான நிலையப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

ByN.Ravi

Mar 4, 2024

மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம்  வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ ” தடுப்பு  சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பங்குன்றம் பகுதிகளில் தேசிய போலியோ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தலின் படி,
திருப்பரங்குன்றம் வட்டா மருத்துவர் தனசேகரன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் . மணிகண்டன் அழகுமலை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ் குமார், ஆய்வக நுட்புனர் மரியதாஸ் மற்றும் கெவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட 450 களப்பணியாளர்கள் 107 போலியோ தடுப்பு மையங்கள் மூலம் “தீவிர போலியோ ” சிறப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது.
வலையன்குளம், சின்ன உடைப்பு, சோளங்குருணி, நிலையூர், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 107 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
மதுரை விமான நிலையத்தில், பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு மையங்களில் 5 வயது குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
பகல் 12 மணி நேரப்படி, திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து சுமார் 8,637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.