கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, க.பரமத்தி தெற்கு ஒன்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாணவரணி செயலாளராக இருந்த கார்வேந்தன் அவர் அக்கட்சியில் இருந்து விலகியும், சிவகுமார், மாகேஷ், முகுந்தன், தீபக், அஜய் குமார், இன்ப இலக்கியன், பிரியா தர்சஹன், சாரதி, சிவா சக்தி, சந்தோஷ் குமார், தரனேஷ், ரகுபதி ஆகியோர் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், க.பரமத்தி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மார்கண்டேயன், கரூர் மத்திய மேற்கு பகுதி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி தலைவர் சுஜித் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
