• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் மீது சி.ஏ.ஜி புகார்..!

Byவிஷா

Apr 26, 2023

தரமற்ற பசுந்தேயிலையை கொள்முதல் செய்திருப்பதாக தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் மீது சி.ஏ.ஜி புகார் தெரிவித்துள்ளது.
2019 – 2022 காலகட்டத்தில் குறைவான விளைச்சல் காரணமாக 99 கோடியே 14 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. பசுந்தேயிலை கொள்முதல் செய்வதற்கு முன்னே தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மீறப்பட்டு விட்டது. தனி நபரிடம் இருந்து கொள்முதல் செய்ப்பட்ட பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு 19 ரூபாயிலிருந்து 30 ரூபாய் இடையே மாறுபட்டும் இருந்தது. அதேபோல கள அலுவலகத்தில் இருந்து பசுந்தேயிலையில் தரம் பற்றிய புகார்கள் கிடைத்தும் நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தது.
இதனால் தனி நபரிடம் இருந்து தரமற்ற பசுந்தேயிலையை 9 கோடியே 61 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது என்று சி.ஏ.ஜி. கூறியுள்ளது.