புதுக்கோட்டையில் இருந்து அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக கந்தர்வகோட்டை சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது இதனால் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சோழகன்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட அனைவரும் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உடனே அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உடனடியாக 108 ஆம்பூலன்ஸை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து ஆம்பூலன்சில் அனுப்பி வைத்தார்.

விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் இருந்த நபருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது






