• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் அதிரடி சோதனை…

Byகாயத்ரி

Sep 13, 2022

சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர், லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று காலை முன்னாள் அதிமுக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதாக அவர் மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுபோல எஸ்.பி.வேலுமணி ஊரக வட்டார வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.