• Sat. Apr 20th, 2024

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..!

ByA.Tamilselvan

Oct 3, 2022

இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டும். தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14 வரை உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17 கடைசி நாள் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *