• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மின்னல் தாக்கி கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..!

ByKalamegam Viswanathan

Nov 7, 2023
மதுரையில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் இரண்டு  பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில்  பல்வேறு பகுதிகளில் கன மழை  அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஒரு வாரமாக  மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 
இந்த நிலையில் மதுரை காக்கா தோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்குமாடி கட்டடங்களின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால் கட்டடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.  அதேபோல் காஜிமார் தெரு பகுதியை இருந்த பழமையான கட்டடம் ஒன்று இடி விழுந்து நள்ளிரவில் சரிந்து விழுந்துள்ளது. மேலும் கட்டடத்தின் உரிமையாளர்கள்  வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஆட்கள் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.