மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாண்டி வயது 55 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடித்து இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சுரேஷ் வயது 54 இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மேலத்தெருவில் கேரம் போர்டு விளையாடும் போது ஏற்பட்ட தாரா அருகில் சுரேஷ் பாண்டியை தள்ளியதில் கீழே விழுந்த பாண்டிக்கு தலை மற்றும் பல் உடைந்து அல்லது தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து போனார். அதனைத் தொடர்ந்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் இறந்த பாண்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கேரம் போர்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரே தள்ளிவிட்டதில் கீழே விழுந்த கொத்தனார் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



