• Fri. May 3rd, 2024

அரசு மருத்துவரிடம் லஞ்சம்.., அமலாக்கத்துறை அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை…

ByKalamegam Viswanathan

Dec 1, 2023

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

டாக்டர். சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க ப்படுவதாக கூறியும், இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார்.

மீதித் தொகையை நேற்று டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டபோது, இது குறித்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.

அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி இன்று திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர் அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர் ஆனால் அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தற்பொழுது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை.

இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு அமலாக்க துறையினர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் சோதனையானது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *