• Mon. May 6th, 2024

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல்முறையாக தாய்ப்பால் சேகரிப்பு மையம்..,

ByKalamegam Viswanathan

Aug 21, 2023

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதுநிலை மருத்துவர் திருமதி செந்திரு ராமச்சந்திரன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி டீன் திருநாவுக்கரசு, சி.இ.ஓ. மணிவண்ணன், மதுரை வேலம்மாள் மருத்துவமனை தாய்ப்பால் சேகரிப்பு மைய தலைவர் ஜெயபாலாஜி மற்றும் மருத்துவர்கள் கவிதா சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாத சூழ்நிலையில் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு அதை சுத்திகரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

அதே போல் மஞ்சள் காமாலை மற்றும் தீவிர சிகிச்சைபிரிவு, எடை குறைவாக பிறந்த குழந்தைகள் ஆகியவற்றிற்கு சிகிச்சையில் இருக்கும் போது தாய்மார்கள் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் சேகரிக்கப்பட்ட பாலை குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜெய பாலாஜி கூறினார் .

இம்மையத்தில் சேகரிக்கப்படும் தாய்ப்பால்கள் மூன்று மாதம் முதல் நான்கு மாதம் வரை பாதுகாப்பாக இருக்கும் என தாய்ப்பால் விழிப்புணர்வு ஆலோசகர் சுப்புலட்சுமி கூறினார்.

தாய்ப்பால் கொடுப்பது மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவு வளர்ச்சி ஏற்படும். ஆகையால் தாய்ப்பால் குழந்தைக்கு அவசியம் வழங்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தாய்ப்பால் சிகப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *