கோவை, அக்.6 கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் மீடியா டவர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்த பகுதி முழுவதும் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்தது.

நிகழ்ச்சியை கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனி சாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து இயக்கம் நடைபெற் றது. அதில் கலெக்டர் பவன்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதில், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி பேசும்போது, ஆரம்ப நிலை புற்றுநோய்களை 90 சதவீதம் குணப்படுத்தி விடலாம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கே.எம்.சி.எச் மார்பக புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 3டி மேமோகிராம், அதிநவீன அல்ட்ராசவுண்ட் சிஸ் டம், 3டி எம்.ஆர்.ஐ., தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்ட சிம்பியா ப்ரோ ஸ்பெக்டா ஸ்பெட் சி.டி. ஸ்கேனர் ஆகியவற்றுடன் தழும்பற்ற அறுவைசிகிச்சை செய் திடும் வசதி உள்ளது என்றார். இதில் கே.எம்.சி.எச். மார்பக புற் றுநோய் சிகிச்சைமையமுதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.