• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும் , ஊழியருக்கும் இடையே கைகலப்பு..,

ByPrabhu Sekar

Mar 27, 2025

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள்
வந்து செல்கின்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையம் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில்
பயணிகளை இறக்கி விடவும் ஏற்றிச் செல்லவும் ஏதுவாக கார்கள் உள்ளே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று பார்க்கிங் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் குத்தகைக்கு எடுத்த பின், பயணிகளை ஏற்றிச் செல்லும் இடம் ஏரோ ஹஃப் நான்காம் தளத்திற்கு மாற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் வாகனங்கள் உள்ளே வந்து செல்ல சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதும் இல்லாமல்,

அங்கு வரக்கூடிய வாகனங்களுக்கு முறையான வழிகாட்டுதல் செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பிக்கப் செய்வதற்காக தனியார் வாகனம் ஒன்று வந்து பிக்கப் செய்து கிளம்பும் நேரத்தில்,

அங்கு பணியில் இருந்த தனியார்போக்குவரத்து சீர் செய்யும் ஊழியர்கள் அந்த வாகனம் அனுமதிக்கபடாத இடத்தில் நிறுத்தபட்டதாக கூறி வாகனத்திற்க்கு பூட்டு போட்டு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

அப்போது அபராத தொகை கட்டிய பின்னர் பூட்டை கழட்டிய போது காரின் கதவு பகுதியில் பூட்டு உரசியதில் சிராய்ப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிக்கும் தனியார் காவலாளிக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

வாகனத்தில் இருக்கும் பெண் உணவு அருந்தவில்லை வாருங்கள் செல்லலாம் என அவரை கூப்பிட்ட போதும் விமான நிலைய ஊழியர்கள் அவரை விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் அவருடைய வாகனத்தை சேதம் ஏற்பட்டதை சரிசெய்து தரமுடியாது என கூறி மிரட்டும் பொழுது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

எரோ ஹஃப் ஊழியர்கள் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இது போன்ற கட்டண வசூலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.