• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரெயினோ பிரெயின் திறனாய்வு மண்டல போட்டி..,

BySeenu

Jul 22, 2025

குழந்தைகளின் திறன் வளர்ப்பில் முன்னணி வகிக்கும் பிரெயினோ பிரெயின் கிட்ஸ் அகாடமி அமைப்பு உலகம் முழுவதும் சுமார் 45 நாடுகளில் 1000 க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த மையம் குழந்தைகளின் அறிவு சார் திறன்களை வளர்க்கும் விதமாக திறமைகளின் திருவிழா எனும் போட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குளோபஸ் அரங்கில் 165 வது பிரெயினோ பிரெயின் மண்டல திறமைகளின் திருவிழா எனும் அபாகஸ் போட்டி இன்று நடைபெற்றது.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
1500 க்கும் மேற்பட்ட இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.காலை முதல் நடைபெற்ற அமர்வில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட போட்டியாளர்கள் 3 நிமிடங்கள் கொண்ட போட்டியில் தங்களது மனக்கணக்குத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இது வேகம்,துல்லியம் மற்றும் கவனிப்பு ஆகியவற்றின் தன்மைகளை அடங்கியது.இது குறித்து பேசிய பிரெயினோபிரெயின் நிர்வாக இயக்குனரும் முதன்மை சிறப்பு விருந்தினருமான ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் முதன்மை பயிற்சியாளரும் இயக்குனருமான அருள் சுப்ரமணியம் ஆகியோர்,கோவையில் நடைபெற்ற
பிரெயினோபிரெயின் மண்டல போட்டி குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் பிரெயினோபிரெயின் போட்டி குழந்தைகளில் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வு என்றும் குறிப்பிட்டனர்.

கணித திறமைகளை மட்டுமல்லாமல் சுய நம்பிக்கை கவனம் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறமைகளை வளர்க்க இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.