• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவையில் இரவில் நோட்டமிட்டு சைக்கிள் திருடும் சிறுவர்கள்..,

BySeenu

Mar 11, 2026

கோவை உக்கடம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue) பகுதியில் நேற்று இரவு அங்கு உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளைக் கண்ட அந்த இரண்டு சிறுவர்கள், யாரும் பார்க்கிறார்களா ? எனச் சுற்றுப்புறத்தை நிதானமாக நோட்டமிட்டு உள்ளார். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த சிறுவர்கள், அங்கு இருந்த சைக்கிளைச் சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றனர்.

இந்த திருட்டுச் சம்பவமும் அந்த வீட்டின் முன்பிருந்த சி.சி.டி.வி (CCTV) கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பொருட்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லையா ?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக இது போன்ற சிறு, சிறு திருட்டுகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.