

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், படம் அதிக வசூலை அள்ளியுள்ளது!
மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாதத்தில் இரண்டாவது பாகத்தின் வேலைகள் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அல்லி அர்ஜுன்! ஸ்டைலான அவரை காட்டில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாகவும் கேங்ஸ்டராகவும் பார்க்க முடிந்தது! இந்தப் படம் அவரை வித்தியாசமாக காட்டியது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது இந்தியில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்தியில் இதுவரை டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தென்னிந்திய மொழிப் படங்களில் பாகுபலி, பாகுபலி 2, சாஹோ, 2.O ஆகிய படங்களே இந்தியில் இத்தகைய 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன.
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த வாரத்தில் மட்டுமே புஷ்பா படம் கூடுதலாக 2 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் முதல் இரண்டு நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை செய்தது குறிப்பிடத்தக்கது.
