சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் தீமைகள்
குறித்தும் மது நாட்டிற்கும், வீட்டுக்கும் கேடுவிளைவிக்கும் என்பதை விளக்கியும், கள்ளச்சாராயம் அருந்தினால் கண்பார்வை மங்குதல், கைகால் வலிப்பு ,
மூளையையும், நரம்பு மண்டலத்தையும் தாக்கி சோர்வடையும் என்பதை எடுத்துரைத்தும், குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி பிள்ளைகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் போதைப் பொருட்களால் இது போன்ற பல தீமைகளிலிருந்து விடுபட மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

இது தொடர்பான நோட்டீசை நகர் முழுவது குடி வைத்து இருசக்கர வாகனங்களில் கார்களில் பயணிப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கினார்கள் தொடர்ந்து அரண்மனை வாசல் முன்பாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் நடத்திக் காட்டினர்.
