தேனி மாவட்டம் மூல வைகை ஆற்றின் உற்பத்தி இடமான கூடம் பாறை, அரசரடி, அஞ்சர புலி, வெள்ளிமலை, புலிகாட்டு ஓடை, இந்திராநகர், பொம்முராஜபுரம், காந்திக்கிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தொடர் மழை பெய்து வருவதால் வைகை ஆற்று கரையோரப் பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் குடிபெயர வேண்டும் என வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதைப்போல விருதுநகர் மாவட்டம் சதுரகிரி , சாப்டூர் ஆகிய மலைப் பகுதியில் பெய்த கனமழையால் யானை கஜம் ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளதா? மற்றும் வீடுகள் இடிந்து உள்ளதா என வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.