• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொங்கலை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு

Byமதி

Dec 13, 2021

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல நேரடியாகவும், WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளிமாநிலங்களான பெங்களூரு, திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.