• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒரு விளம்பர பதிவிற்கு 1 கோடி வாங்கும் பாலிவுட் நடிகை!!

Byகாயத்ரி

Aug 8, 2022

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் கேட்போரை அலர வைத்துள்ளது.

பிரபல நடிகர் நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளனர் என்பதும் அவர்களது கணக்குகளில் மில்லியன் கணக்கான பாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதற்கு 85 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரது திரைப்படம் வெளியாகும்போது இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு என்று ஒரு காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மூலம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.