

தேனி வடக்கு மாவட்டம் போடி தொகுதி திமுக நகர அலுவலகத்தை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவைத்தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார் . பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மோடி நகர செயலாளர் புருசோத்தமன் முன்னிலை வகித்தார். நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

நகர துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் குமார் ,காளிதாஸ், அலமேலு மங்கை, நகரத் துணைப் பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன் , முகமது பஷீர், பரணி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சங்கர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.