மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம் முகாம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவர்களின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து விருதுநகர் ஆத்து பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட P. பன்னீர் செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் அணி, Dr. பிரேம்நாத் நெல்லை மண்டல செயலாளர் இரத்த தானம் முகாமினை துவக்கி வைத்தனர். அருகில் சொக்கர், மூர்த்தி சிவா,மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் தலை கவசம் மற்றும் பழங்கள் பிஸ்கெட் அடங்கிய school bag பரிசு வழங்கப்பட்டது.


முகாமினை விருதுநகர் மாவட்ட தலைவர் காளிதாஸ், பொருளாளர் கமல்கண்ணன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இரத்த தானம் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.




