• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காரைக்காலில் தமுமுக சார்பில் இரத்த தானம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Aug 16, 2025

நாட்டின் 79 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதனை போற்றும் வகையில் காரைக்காலில் தமுமுக சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மெய்தின் பள்ளி வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் துவங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

இரத்த தானம் செய்தவர்களுக்கு தமுமுக சார்பில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டது. தமுமுகவின் மருத்துவ சேவை அணி சார்பில் தொடர்ந்து பல்வேறு நாட்களில் ரத்ததான முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.