விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜே.சி.ஐ. கிங்ஸ் சிவகாசி அமைப்பின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
60க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஜேசிஐ கிங்ஸ் சிவகாசி அமைப்பினர் செய்திருந்தனர்.