• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பவன் கல்யாணத்துக்கு வேதங்கள் முழங்க ஆசீர்வாதம்

ByKalamegam Viswanathan

Feb 14, 2025

திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பவன் கல்யாணத்துக்கு திருப்பரங்குன்றம் கந்த குரு வேத பாடசாலையில் வேதங்கள் முழங்க ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

பழனியில் சுவாமி தரிசனம் முடித்து ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய சரியாக மாலை 5:20மணிக்கு வந்தடைந்தார்.

திருக்கோயில் சார்பாக ரமேஷ் பட்டர் மாலையணிவித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது மகன், நண்பருடன் தரிசனம் முடித்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள ஸ்ரீ கந்த குரு வேத பாடசாலையில் ஆந்திர துணை முதல்வருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசிர்வாதம் செய்யப்பட்டது. பின்னர் கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.