• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரூ.800 கோடியில் ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி- கெஜ்ரிவால்

ByA.Tamilselvan

Aug 26, 2022

ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் கொடுத்து பாஜக டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆம் ஆம்தி எம்எல்ஏக்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் தொலைபேசி வாயிலாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியவுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ சோதனை நடத்தியது.இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மனிஷ் சிசோடியா, இதில் இருந்து தப்பிக்க தன்னை பாஜகவில் சேர்ந்து கொள்ள பேரம் நடைபெற்றதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.மேலும், தங்கள் எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்னாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். அவர்களை பாஜகவில் சேரக் கூறி ரூ.20-25 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை வீசியது. இதற்காக மொத்தம் 800 கோடி ரூபாய் தொகையை பாஜக பேரம் பேசியுள்ளது.