கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று த வெ க தலைவர் நடிகர் விஜய் பரப்புரைக்காக வந்த போது அவரைக்கான கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்காக, கரூர் காவல்நிலையம் எதிரே உள்ள குமரன் சிலை முன்பு, உயிரிழந்த அப்பாவி மக்கள் 41 நபர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பாஜக சார்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் செல்வம், மாநில ஓ பி சி அணி சமூக ஊடக பொறுப்பாளர் கார்த்திகேயன், மாநில ஓ பி சி அணி செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.
