வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர் பொய்யான ஆவணங்களை கொடுத்து சர்ச் கட்டுவதாக குற்றம் சாட்டினர். மேலும் அதனை கட்டுவதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி வாங்கிய நிலையில் தற்பொழுது சர்ச் கட்டுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். அது குறித்து மாவட்ட ஆட்சியர் இடமும் மனு அளித்தனர்.
இந்நிலையில் சர்ச் நிர்வாகத்தினர் தங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும் சர்ச் கட்டுவதற்கு தான் அனுமதி பெற்று இருப்பதாகவும் கூறி தங்களுக்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சர்ச் கட்டுவதற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய சர்ச் நிர்வாகத்தினர் அனைத்து ஆவணங்களும் அனுமதி கடிதமும் NOC சர்டிபிகேட் களும் பெற்று தான் அதனை கட்டுவதாகவும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் வருவதாக தெரிவித்தனர். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதற்காக நாங்கள் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்.





