மதுரை,சோழவந்தானில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும்
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில்,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மாநில செயற்குழு தீர்மானங்களை வலியுறுத்தி மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.பி. ராஜசிம்மன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்பி டாக்டர் கே.பி. ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். சோழவந்தான் தொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி மாவட்ட பொருளாளர் முத்துராம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். சோழவந்தான் ஒன்றிய தலைவர்
கதிர்வேல் அறிக்கை வாசிக்க, முன்னாள் மாவட்டத்தலைவர் ராமன், மாநிலத் துணைத் தலைவர் பி. சண்முகானந்தம் , மீனவர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் கோசா பெருமாள், மூவேந்திரன், மாவட்ட நிர்வாகி ரவிசங்கர் , சித்ராதேவி , செல்வி, வாசு,
ராஜசேகர், அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் சிவராமன், பொன்குமார், ராமதுரை, மண்டல தலைவர்கள் கதிர்வேல், முத்துப்பாண்டி, அழகர்சாமி, இருளப்பன், சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. சார்பில், பட்ஜெட் விளக்க கூட்டம்
