காரியாபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிக்க முயற்சி செய்த பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கிய பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, அவரது உருவப்படத்தை எரிப்பதற்காக பா.ஜ.க வினர மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் பஸ் நிலையம் வந்தனர்,

அப்போது பழனிச்சாமியின் படத்தை பாஜகவினர் எரிக்க முயற்சி செய்தபோது போலீசார் உங்களுக்கு படத்தை எரிக்கும் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். அப்போது பா.ஜ.கவினருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் திடீரென்று பா.ஜ.கவினர் பழனிச்சாமியை படத்தை எரிக்க முயற்சி செய்தனர். போலீசார் அதை தடுத்து அந்த படங்களை பறித்து சென்றனர்.

அதன் பிறகு பழனிச்சாமியை கண்டித்து கோஷஙகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவபாலன் கட்டுறவு பிரிவு தலைவர் பாலமுருகன், பா.ஜ.க நிர்வாகிகள், இளவரசன் முனீஸ்வர பிரபு மணிக்குமார். பிரபாகரன், தங்கராஜ் , கோதண்டம் மகளிர் அணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
