

மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே பாஜக போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பாஜக ஓ. பி .சி .அணி மாவட்ட செயலாளர் இன்று காலை, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து, மதுரை மாவட்ட பாஜகவினர் நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில், மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரை அருகே திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி உதவி செய்வதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜக பிரமுகர் படுகொலை அடுத்து, சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

