உசிலம்பட்டியில் 49வது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர்.

முன்னாள் பாரத பிரதமரும், அணு ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனையை உலகறிய செய்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் 101வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் போஸ் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் இன்று 49வது ஆண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கினர்.
சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெறுவதுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிக் கொள்ள கேட்டுக் கொண்டனர்.




