
நாகர்கோவிலில் உள்ள சாலைகளை செப்பனிடாத திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரியும் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. காந்தி தலைமையில் பாஜகவினர் ஊர்வலம் சென்றனர்.

மேலும், 48 மணிநேர உண்ணாவிரத போராடத்தை தொடங்கினார். இதில் நாங்குநேரி சட்டமன்ற மன்ற உறுப்பினர் நயினார் நகேந்திரன் மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
