• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது..,

ByAnandakumar

Aug 24, 2025

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

விபச்சாரம் நடத்த உதவிய பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மற்றொரு பெண்ணை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கரூர் தாந்தோன்றிமலை ஊரணி மேட்டு பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதி என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்து அவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ரகுபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து விபச்சார நடத்த உதவியாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.