சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஏதாவது ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்றொரு நினைப்பு இருக்கின்றது.
முக்கியமான சேரன் சோழன் பாண்டியன் என மூன்று மன்னர்கள் நமக்கு இருக்கின்றார்கள் அவர்கள் மூன்று பேரும் தமிழர்கள் அவர்களை தமிழ்நாடு தான் கொண்டாடும்.

நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்து தேவையில்லாமல் ஒரு விஷயத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய நினைக்கின்றார்.
அந்தக் கூட்டத்தில் வேண்டுமென்றே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இந்த சமுதாயத்தின் தலைவர்களின் பேரை சொல்லிவிட்டு மற்ற தலைவர்களின் பெயரை விட்டுவிட்டார் இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
காங்கிரசை திமுக விழுங்கி கொண்டிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு,
எங்களுடைய கூட்டணி 25 ஆண்டுகளாக நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது
ஒருங்கிணைந்த கூட்டணியாக இருக்கின்றது.
பாஜகவிடமிருந்து இந்தியாவை காப்பாற்றும் ஒரே கூட்டணி இதுதான் இல்லையென்றால் பாஜகவை போன்று மோசமாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இந்த நாட்டை விழுங்கி கொண்டிருக்கும் ஒரு கட்சி மிகப்பெரிய சண்டைகளை உருவாக்கக்கூடிய ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்றால் இந்த கூட்டணி கண்டிப்பாக தேவை.