நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்காலில் பாஜக ஓ.பி.சி அணி சார்பில் ஓ.பி.சி.அணி முன்னாள் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பொறுப்பாளர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணை தலைவர் சுரேஷ் கண்ணா, மணியம்மை, வடக்குத் தொகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், சசிகுமார் உள்ளிட்ட ஏராளமான பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.