தேவேந்திர குல வேளாளரை ஓபிசி பிரிவில் சேர்க்க கோரியும், பாஜக நிர்வாகி இராம. சீனிவாசன் – ஐ சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதை கண்டித்தும், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை முன்பு , மருதம் ஆன்மிக பேரவை மாநிலத் தலைவர்.சரவணபாண்டியன் தலைமையில், S.M.ராஜா முன்னிலையிலும் தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், தங்களது இனத்தை பட்டியல் இனத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிசி பிரிவில் தங்களதுஇனத்தை சேர்க்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனை தொடர்ந்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராம. சீனிவாசனை சமூக ஊடகங்கள் மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாடத்தில், மள்ளர் சேனை மாநிலத் தலைவர், சோலை பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் முத்துமணி, ஜெயசந்திரன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர். பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக நிர்வாகி இராம. சீனிவாசனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
