• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் அன்னை மகாலட்சுமி கோவிலில் பெண்களை சாட்டையால் அடித்து வினோத வழிபாடு

ByI.Sekar

Mar 9, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அன்னை மகாலட்சுமி கோவிலில் மாசி மாத திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பூசாரியின் கையால் பெண்கள் சவுக்கடி வாங்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி தங்களது குடும்ப கஷ்டங்கள் நீங்கவும், நினைத்தது நிறைவேறவும், வேண்டிய வரம் கிடைக்கவும் மூன்று வாரங்கள் விரதம் இருந்த இளம் மற்றும் சுமங்கலி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலின் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு
ஒவ்வொருவராக பூசாரியின் கையில் இருந்த சாட்டையால் அருள் இறங்கி சாட்டையடி பெற்றுக் கொண்டனர். இது இந்த கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு என்றும் நினைப்பதை வேண்டிக்கொண்டு விரதம் இருந்து இவ்வாறு சாட்டையடி வாங்கும் பெண்களுக்கு நினைத்தது நிறைவேறி வருவதாகவும்
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கிராமமக்கள் முன்னதாக கோவிலில் இருந்து பூசாரி உட்பட பக்தர்கள் ஊர்வலமாக சென்று விநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்து பூசாரி ஆனி செருப்பு அணிந்து வந்து கோவிலை அடைந்தார்.