அரியலூர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் பவானி, மா . பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ஒபி சங்கர், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்சிவசங்கர்,மாவட்டவழக்கறிஞர் அணி செயலாளர் ஒ வெங்கடாஜலபதி, வழக்கறிஞர் செல்ல .சுகுமார், ஒன்றியச் செயலாளர்கள் டி.செல்வராசு,பொய்யூர் பாலு , அருங்கால் பி . ஜோதிவேல், நகரச் செயலாளர் செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக எம் ஜி ஆர் கழகம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஓட்ட கோவில் மணிவேல், நகர செயலாளர் மோகன் மற்றும் கட்சியினர், மங்காயி பிள்ளையார் கோவில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவரது 109 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.





