• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தலைதூக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

Byகாயத்ரி

Jan 10, 2022

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருந்தார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார். விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் பலர் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

பல்வேறு சூழ்நிலைகளில் முரளிதரன் இலங்கை அரசுக்கும் ராஜபக்சேவுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளநிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை தமிழர்கள் என முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நீங்கள் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனர். பின்னர் விஜய்சேதுபதி 800 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் விஜய் இல்லாமல் தனது வரலாறு உருவாகாது என கூறி முத்தையா முரளிதரன் படத்தை கைவிடுவதாக அறிவித்தார்.இந்நிலையில் பாலிவுட்டில் ஹிட் அடித்த ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர், சாப்பி, ஹோட்டல் மும்பை, தி வெட்டிங் கெஸ்ட் உள்பட பல படங்களில் நடித்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிரிட்டனை சேர்ந்த இவர் தற்போது மங்கி மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்..