• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஹனிமூன் கொண்டாட்டத்தில் பிகில் பட நடிகை!

தமிழில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம் பிகில். இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து ரெபா மோனிகா ஹரிஷ் கல்யாணுடன் ‘தனுசுராசி நேயர்களே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர் எப்ஐஆர், மழையில் நனைகிறேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை ரெபா தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கடந்த ஜனவரி 9ம் தேதி தன் நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவருக்கு பலரும் வாழ்த்துக் கூறியிருந்தனர். இந்த இந்நிலையில் அந்த இளம் ஜோடி தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு இருவரும் ரொமான்டிக்காக எடுத்த புகைப்படத்தை ரெபா தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.