• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் தொழிலதிபர்களுக்கான ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம்..!

Byவிஷா

May 1, 2023

இன்று மே மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில், தொழிலதிபர்களுக்கு ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.100 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள நிறுவனங்கள் பரிவர்த்தனையின் ரசீதை ஏழு நாட்களுக்குள் இன்வாய்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டில் கேஒய்சி கட்டாயம்:

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் கேஒய்சி உடன் கூடிய இ வாலட்டுகள் மூலம் மட்டுமே முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். எதுவுமே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எல்பிஜி, சி என் ஜி மற்றும் பி என் ஜி விலைகள்:
மே ஒன்றாம் தேதி முதல் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி விலையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
பிஎன்பி ஏடிஎம் பரிவர்த்தனை:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாத நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து பரிவர்த்தனை தோல்வியடைந்தால் வங்கியால் பத்து ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
பேட்டரி வாகனங்களுக்கு நிவாரணம்:

மே 1ஆம் தேதி முதல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான விதிமுறைகளும் மாற்றப்பட உள்ளது. அதன்படி இந்த வாகனங்களுக்கு இனி பர்மிட் கட்டாயம் வசூலிக்க படாது.