மதுரையில் தேவரின் பெரிய சிலைக்கு இன்று அணிவித்த மாலைகளிலேயே பெரிய மாலையை அணிவித்து, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி பெரிய அளவில் மலர் அபிஷேகம் செய்தார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேவரை வணங்கிய ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ பெரிய சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.
முன்னதாக கோமதிபுரத்திலிருந்து 100 வாகனங்களில் இளைஞர்கள் பெரியவர்கள் கூட்டத்துடன் ஊர்வலமாக வந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையை வந்தடைந்து அங்கு தேவருக்கு மரியாதை செய்து விட்டு, பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார்.
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் வெள்ளைச்சாமி தேவர் நினைவிடம் அருகில் உள்ள அன்னதான பந்தலில் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் குடும்பத்தார் சார்பில் 24 மணிநேர தொடர் அன்னதான விருந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.








